Categories
அரசியல்

கொரோனோவின் தாக்கம் அறியாத மக்கள் – முதல்வர் பேட்டி..!!

கொரோனாவின் தாக்கம் அறியாத மக்கள், வெளியே செல்கின்றனர் என தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை  உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம்  இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறைந்த விலையில் உணவு வழங்குவதால், அடித்தட்டு மக்கள் மற்றும் ஏராளமானோர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில்   உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். உணவை சாப்பிட்டு பார்த்த அவர், அங்கு சாப்பிடுபவர்களிடம்  உணவின் தரம் குறித்து கேட்டு தெரிந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கொரோனா வைரஸால் பாதிப்படைவோர்க்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும்  தெரிவித்தார்.

 

Categories

Tech |