இங்கிலாந்தில் ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முக்கிய தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் உருமாற்றமடைந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது இங்கிலாந்தில் ஒரே நாளில் சுமார் 30,597 நபர்களை கொரோனா பெருந்தொற்று பாதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 201 நபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.