கைப்பேசியை முழுங்கிய இளைஞர் ஒருவருக்கு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து வயிற்றிலிருந்து கைப்பேசியை அகற்றியுள்ளனர்.
KOSOVO நாட்டில் பிரிஸ்டினா என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் 33 வயதுடைய ஒரு இளைஞர் வசித்து வருகிறார். அந்த இளைஞர் நோக்கியோ கைப்பேசி ஒன்றை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென அவரை அறியாமலேயே அதனை முழுங்கியுள்ளார். அதன்பின் அவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞர் பிரிஸ்டினாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞர் கைப்பேசியை முழுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றார்கள்.
இதுக்குறித்து மருத்துவர்கள் அவரிடம் கூறியதாவது “உங்கள் வயிற்றில் ஜீரணிக்க முடியாத மிகப்பெரிய கைப்பேசி உள்ளது. அதில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்தால் உங்கள் உயிருக்கே ஆபத்தாய் மாறிவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதனையடுத்து கைப்பேசியை எடுக்க வேறு வழியே இல்லாமல் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன்பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது வயிற்றில் இருந்து டாக்டர்கள் கைப்பேசியை எடுத்து உள்ளனர். மேலும் கைப்பேசி வயிற்றுக்குள் இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அது மக்கள் பலராலும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.