Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொத்தனார் கொலை வழக்கு” 22 வருடம் தேடப்பட்ட குற்றவாளி…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

கொத்தனார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 22 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கல்பாரப்பட்டி கொம்பாடிபட்டி மேட்டுபகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு கொத்தனார் சுரேந்திரன் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அவருடன் கொத்தனாராக பணிபுரிந்து வந்த சுபாஷ் என்ற சுபாஷ் சந்திரபோஸ், கணேசன், பாலு, மூர்த்தி என்ற ஜான் விக்டர் ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மூர்த்திக்கு மல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதற்கு சுரேந்திரன் இடையூறாக இருந்ததால் அவரை திட்டமிட்டு மூர்த்தி கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இந்த விசாரணையின்போது மூர்த்தி குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டதால் மற்ற 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மற்ற 3 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்தது. கடந்த 2006-ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணை இறுதியில் சுபாஷ், கணேசன், பாலு ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக மூர்த்தி அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையில் சேலம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பொறுப்பேற்ற பின் மூர்த்தியை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்பின் சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த மூர்த்தி என்ற ஜான் விக்டரை தேடும் பணியில் தனிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பூரில் குடும்பத்தினருடன் தலைமறைவாக வசித்து வந்த மூர்த்தி தற்போது சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக வருவதை காவல்துறையினர் அறிந்தனர். இதனால் காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து சேலம் பகுதிக்கு வந்த மூர்த்தியை  கையும் களவுமாக பிடித்தனர். இவ்வாறு 22 வருடங்களாக கொலை வழக்கில் தேடப்பட்ட மூர்த்தியை காவல்துறையினர் பிடித்ததால் அவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பாராட்டினார்.

Categories

Tech |