கடன் தொல்லையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இடையன்குடி கால்டுவெல்புரம் பகுதியில் ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லையால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயசிங் வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு ஆனைகுடி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை அறிந்த உறவினர்கள் ஜெயசிங்கை உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயசிங் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.