Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொத்தடிமைகளாக சிக்கிய நபர்கள்…. நிவாரணம் வழங்கிய அரசு…. அதிகாரிகளின் செயல்….!!

கொத்தடிமைகளாக சிக்கியவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான சவுக்குத் தோப்பில் இருளர் இன மக்களை கொத்தடிமைகளாக வைத்து மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஆர்.டி.ஓ சைலந்தருக்கு புகார் வந்துள்ளது. இதனால் ஆர்.டி.ஓ சைலேந்தர், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில் சவுக்குத் தோப்பில் 3 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு சிறுவன் மரம் வெட்ட கொத்தடிமையாக ஈடுபட்டது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆர்.டி.ஓ சைலேந்தர் கொத்தடிமையாக இருந்தவர்களை மீட்டு அரசு நிவாரணம் வழங்கி மறுவாழ்வு வழிவகை செய்து அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

Categories

Tech |