Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” தேங்கி கிடந்த நீர்…. சிரமப்பட்ட மாணவ-மாணவிகள்….!!

கனமழை பெய்ததால் வகுப்பு முடிந்து வரும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையானது மாலை நேரமும் பெய்ததால் பள்ளி, கல்லூரிகளில்இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் சிலர் மழையில் நனைந்தபடியும், குடையை பிடித்தபடியும் சென்றனர். இதனையடுத்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் மாணவ- மாணவிகளை  பெற்றோர் அழைத்து சென்றனர். இந்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவதி அடைந்துள்ளனர். இவ்வாறு பெய்த தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வேளாண்மை துறை அலுவலகம் பக்கத்தில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

இதில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையினால் புதுக்கோட்டை கம்பன் நகரில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பெரியார் நகர் பகுதியில் சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோன்று அறந்தாங்கி பகுதிகளில் பெய்த கனமழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கி ஓட்டுநர்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மேலும் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளான இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, வயலோகம், பெருமநாடு போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |