இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூரில் இரவில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மழையுடன் சேர்ந்து காற்றும் வீசியதால் புதிய பேருந்து நிலையத்தில் மரக்கிளைகள் முறிந்து அங்குள்ள 3 வேன்கள் மீது விழுந்தது.
இதைப்போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பின் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மேலும் இந்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர்.