கடம்பூர் மலைப்பாதையில் தேன்றிய சிறு சிறு அருவிகள் முன்பு நின்று வாகன ஓட்டிகள் செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் மலைப்பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றது. கடந்த சில நாட்களாக அந்த மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதி முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றியது. மேலும் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மல்லியம்மன் துர்க்கம் கோவில் அருகில் உள்ள மலைச்சரிவில் தோன்றிய அருவியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அங்கு நின்று செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.