Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. அதிகாரியின் ஆய்வு….!!

மழையினால் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் 500 ஆண்டுகள் பழமையான செல்லீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் உள்ள சுற்றுச்சுவரானது கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையினால் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் இரவில் நடைபெற்றதால் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து கோவில் செயல் அதிகாரி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிந்த சுற்றுச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |