Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” இடிந்து விழுந்த சுவர்…. சிறுவனுக்கு நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அல்லிகுட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் ஏழுமலை-செல்லம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ராமசாமி என்ற மகனும், காளியம்மாள் என்ற மகளும் இருக்கின்றனர். இவர்களில் ராமசாமி அதே பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும்,  5 வயதில் பாலசபரி என்ற மகனும் இருந்தனர். இதில் காளியம்மாளுக்கும் வலசையூரை சேர்ந்த குருசாமி என்பவருடன் திருமணம் முடிந்து மாரியப்பன் என்ற மகனும், புவனா என்ற மகளும் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக காளியம்மாள் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதன் காரணமாக ஏழுமலை தனது மனைவி, மகன், மகள், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வாடகை வீட்டில் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறார். சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏழுமலையின் ஓட்டு வீட்டில் சுவர்கள் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனிடையில் ஏழுமலையின் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து மறுநாள் காலையில் சிறுவன் பாலசபரி மட்டும் எழுந்திருக்காமல் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் செல்லம்மாள் பால் வாங்க வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதில் நந்தினி வீட்டின் வெளிப்பகுதியில் பாத்திரம் கழுவி கொண்டிருந்ததாக தெரிகிறது. மேலும் மற்றவர்கள் மழையின் காரணமாக வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். இதனிடையில் வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் சிறுவன் பாலசபரி, ராமசாமி, ஏழுமலை, காளியம்மாள், புவனா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தினி மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டனர்.இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தவர்களை மீட்டனர்.

அப்போது சிறுவன் பாலசபரிக்கு அதிகமாக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் சிறுவன் பாலசபரி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவன் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த ஏழுமலை, ராமசாமி, காளியம்மாள், புவனா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |