கொட்டி தீர்த்த கனமழையினால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குமலன் குட்டை, காளைமாடு சிலை- சென்னிமலை சாலை, ரயில்வே நுழைவு பாலம், கொல்லம்பாளையம் ரவுண்டானா உட்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கழிவுநீர் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
அதன்பின் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மது பாட்டில்கள் சாக்கடைகளில் சேர்ந்து அடைப்பு ஏற்படுத்தியதால் பல இடங்களில் கழிவுநீர் சாலையில் பொங்கி வழிந்தது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோன்று பெருந்துறை மற்றும் அதன் சுற்றியுள்ள சீனாபுரம், துடுப்பதி, பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, விஜயமங்கலம், திங்களூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது.