சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி மெயின் ரோடு அருகே வடக்கு தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாறு சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர் வழியாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.