Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. வயல்களில் தேங்கிய நீர்…. வாலிபர்கள் செய்த செயல்….!!

கனமழையின் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் உள்ள பிச்சன்கோட்டகம், பாமணி, கோட்டகம், ஆலிவலம், ஆண்டாங்கரை, சீராளத்தூர், கொத்தமங்கலம், எழிலூர், நுணாக்காடு உள்ளிட்ட 32 ஊராட்சி கிராமங்களில் 36,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களாக திருத்துறைப்பூண்டியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் தாளடி இளம்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.

இந்நிலையில் தற்போது மழைவிட்டு 2 நாட்கள் ஆகியும் வளவனாறு, கோரையாறு மற்றும் வடிகால் வாய்க்கால்களில் ஆகாய தாமரை, கோரை புற்கள் மண்டி கிடப்பதால் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதன் காரணமாக மழைநீரில் மூழ்கிய 10 ஆயிரம் ஏக்கர் தாளடி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டியில் பெரும்பாலான வயல்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த வயல்களில் அந்த பகுதி வாலிபர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.

Categories

Tech |