கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பில்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, ஈரோடு, திருப்பூர், கோவையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதில், நேற்று வரை 62 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் மீதமுள்ள 15 பேரும் குணமடைந்ததால் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.
அந்தவகையில், நேற்று வரை தமிழகத்தில் 2,314 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், இன்று கோவை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த கடைசி 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் மொத்தம் 146 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 145 பேரும் குணமடைந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 77 பேரும் இன்று குணமடைந்துள்ளனர்.