கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2019 முதல் NIA-வால் அவ்வப்போது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சூழ்நிலையில் இப்படி NIA உடைய வளையத்தில் விசாரணைக்கு இருக்கக்கூடிய ஒரு நபர்கள், திடீரென்று ஒரு பயங்கரவாத செயலை எப்படி நிகழ்த்தி இருப்பார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி கூறியதாக இருக்கிறது.
எங்கே உளவுத்துறையும், NIAவும் இதை தவற விட்டு விட்டார்களோ என்று தான் எங்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது. இஸ்லாம் மார்கம் ஒருபோதும் பயங்கரவாதத்தை போதிப்பதில்லை. கோவையில் மத ஒற்றுமைக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து ஜமாத்தார்களும், அனைத்து சமூக மக்களோடு ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்திற்காகவும், மத ஒற்றுமைக்காகவும் கடந்த காலத்தில் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றி வருவதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
கடந்த காலம் முதல் கோவை நகரம் அமைதி பூங்காவாக, அமைதியான நகரமாக மாறுவதற்கு ஜமாத்தார்களும், இஸ்லாமியர்களும், அனைத்து மத மக்களோடு நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவதை சீர்குழிக்கும் விதமாக பயங்கரவாதம் எந்த மூலையில் இருந்து வந்தாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதை எதிர் கொண்டு இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல்துறையும், தமிழக அரசும் எடுக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய மக்களும், ஜமாத்தார்களும் உறுதுணையாக இருப்போம் என்று கூறிக் கொள்கிறோம்.
கோவை நகரில் எந்த பகுதியாக இருந்தாலும் சம்பந்தமில்லாமல் இளைஞர்கள் தவறாக இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்கின்ற என்று ஆராயும் வகையில் மாவட்ட நிர்வாகத்தோடு, காவல் நிர்வாகத்தோடு ஒவ்வொரு ஜமாத் பகுதிகளிலும் அந்தந்த காவல்துறை அமைப்போடு ஒரு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-யை வலிமைப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம். அதன் அடிப்படையில் குலுக்கல் அமைக்கப்பட்டு, இவ்வாறு சமூகத்தில் தனியாக ஒதுங்கி இருந்து செயல்படும் இளைஞர்களை கண்காணித்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, அவர்களுடைய வாழ்க்கை பிரச்சனையை ஆராய்ந்து, அவர்களை நேர் வழிபடுத்துவதற்கு உண்டான எல்லாம் முயற்சிகளையும் எடுப்பதாக தீர்மானித்துள்ளோம் என தெரிவித்தனர்.