கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் கார் ஓட்டுனர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை கூட்டி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த உண்மை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கன்னடம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டனர்.இந்நிலையில் கோவை சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஸ்வரர் திருக்கோயில் அருகில் அதிகாலை 4.10 மணிக்கு கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவித்தனர்.
வெடிகுண்டு வைத்த காரை இயக்கி மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்க வைத்து பல உயிரை பழிவாங்க சதி செய்த நிகழ்வாக இது கருதப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறை பொறுப்பு வகிக்கும் நிர்வாக திறமையற்ற விடியா ஆட்சியின் முதல்வர் என்ன பதில் கூற போகிறார்?. உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர். இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாய் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சாதி வேலையா?. அப்படி இல்லையெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றாரா? என காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமின்றி சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.