Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு விவகாரம்…. டிசம்பர் 6 ஆம் தேதி வரை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடி விபத்து, மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு என தென்னிந்தியாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மங்களூர் விவகாரத்தில் கோவைக்கும் தொடர்பு இருப்பதாக கர்நாடக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது. இவர்கள் கடந்த வாரம் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர் னபடுத்தப்பட்டனர். அப்போது நவம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கோவை மத்திய சிறையில் இருந்தபடி நேற்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் என.ஐ.ஏ. நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 பேரையும் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவு விட்டது. அதனைத் தொடர்ந்து மறுபுறம் மங்களூர் விவகாரம் குறித்து கோவையில் விசாரணை நடந்து வருகிறது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்த தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரியிடம் இருந்து கேட்டு பெறவும் திட்டமிட்டுள்ளனர். மங்களூர் சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரித் கோவையில் தங்கியிருந்த இடங்கள், சென்று வந்த இடங்கள், தகவல் தொடர்பு கொண்டவர்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் ஷாரித் தங்கியிருந்த விடுதிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷாரித்தின் whatsapp முகப்பு படத்தில் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையின் புகைப்படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இவருடைய whatsapp குழு நவம்பர் 18ம் தேதி வரை செயல்பாட்டில் இருந்துள்ளது. எனவே ஆதியோகி புகைப்படம், அதன் பின்னணி, ஈஷா மையத்திற்கு சென்று வந்தாரா போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ‘ஷாரித் பிரேம் ராஜ்’ என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்ததும், தொலைபேசி அழைப்புகளின் வழியாக பேசாமல் whatsapp கால்கள் மூலமாகவும், whatsapp மூலமாகவும் தகவல்கள் பரிமாற்றம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |