Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

 “அலட்சியம்” கொரோனா பரவ…. காரணமாகும் கோவை இளைஞர்கள்…!!

கோவையில் இளைஞர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஓரிரு பாதிப்புகள் மட்டுமே அவ்வப்போது வெளிப்படும் நிலையில்,நோய் பாதிப்பு குறைந்துவிட்டது என்ற அலட்சியத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கொரோனாவை பரப்பும் வகையில், பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் 3,4 பேர் சேர்ந்து சுத்துவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ரோட்டில் தோள் மீது கை போட்டு நடப்பது, எங்கு சென்றாலும் முகக்கவசம் கையிலெடுத்து கூட வராமல் அலட்சியமாக வருவது உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் இதற்கும் ஒருபடி மேலேபோய் நண்பர்களாகிய நாங்கள் ஆடையை மாற்றிக் கொள்வோம், முகத்தை மாற்றிக் கொள்ள மாட்டோமா? என ஒருவர் பயன்படுத்திய முக கவசத்தை இன்னொருவர் பயன்படுத்தி அதை வீடியோ எடுத்து டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் போட்டு வருகின்றனர்.

இது கொரோனா குறித்த தவறான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதோடு, கொரோனா பரவ வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகள் தெரிவித்ததாவது, கோவையில் மீண்டும் அதிகாரிகளால் முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பிடிக்காதவர்கள் கண்காணிக்கப்பட இருக்கிறார்கள் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் நிறுத்தப்படாமல் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |