Categories
சினிமா தமிழ் சினிமா

கதாநாயகியாக கோவைசரளா…. வெளியான அதிரடி தகவல்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

கோவைசரளா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை கோவைசரளா தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ‘வெள்ளிரதம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ‘முந்தானைமுடிச்சு’, ‘வைதேகி காத்திருந்தாள்’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

58 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாத கோவை சரளா.. காரணம் இதுதான்! -  Cinemapettai

 

மேலும், இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுசாலமன் இயக்கும் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Categories

Tech |