ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு சர்வதேச பயணிகளுக்கு போட்டிருந்த கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் பல கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையடுத்து தற்போது அனைத்து நாடுகளும் கொரோனா குறைய தொடங்கியுள்ளதால் தங்கள் நாட்டிற்குள் அதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கமும் சர்வதேச பயணிகளுக்காக கொரோனாவை தடுக்கும் பொருட்டு போட்டிருந்த கட்டுப்பாடுகளில் பலவித தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலியா கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை ஆய்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சினை செலுத்தியுள்ள சுற்றுலா பயணிகள் தாராளமாக தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.