Categories
உலக செய்திகள்

இனி தாராளமாக கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்தலாம்…. அனுமதி அளித்த பிரபல நாடு….!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை பக்ரைன் அரசாங்கம் தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியினை பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் பக்ரைன் அரசாங்கம் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை தங்கள் நாட்டிற்குள் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளது.

Categories

Tech |