மலேசியாவில் கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான 37 இறப்புகளில் இருந்து இன்று 43 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மொத்தம் 2,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 94 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர்.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில்; புதியதாக இறந்த 6 பேரில் 5 பேர் மலேசியாவை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்று அறிவித்தார்.