வங்காளதேசத்தின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணம் சென்ற இந்திய நாட்டின் ஜனாதிபதி அங்கிருந்து புறப்படும் போது புதிதாக புதுப்பித்து கட்டப்பட்ட காளியம்மன் கோவிலை திறந்து வைத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தினர்கள் கடந்த 1971ஆம் ஆண்டு மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீரம்னா காளியம்மன் கோவிலை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். அப்போது அந்த கோவிலில் தஞ்சம் புகுந்திருந்த சுமார் 1,000 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளார்கள்.
இதனையடுத்து வங்காளதேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு அந்நாடும், இந்திய அரசாங்கமும் கைகோர்த்து மேல் குறிப்பிட்டுள்ள காளியம்மன் கோவிலை புதுப்பித்து கட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் வங்காளதேசத்தின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் 3 நாள்சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்த சுற்றுப் பயணத்தின் இறுதி நாளான நேற்று சமீபத்தில் மேற்குறிப்பிட்டுள்ள காளியம்மன் கோவிலில் விரிவாக்கம் செய்யப்பட்ட கட்டிட பகுதியை இந்திய நாட்டின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் சென்று திறந்து வைத்துள்ளார்.