கோவில் நடை அடைப்பால் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோவில், ஆத்மநாத சுவாமி கோவில், குறிச்சி குளம் முத்து மாரியம்மன் கோவில்களில் நடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் ஆவுடையார்கோவில் மற்றும் ஆத்மநாத சுவாமி கோவில் ஆகிய 2 கோவிலிலும் நடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் நித்திய பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் அவதியுற்று வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.