கரபுரநாதர் கோவிலில் பிரதோஷமானது கோலாகலமாக நடைபெற்று பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர் கோவில் ஒன்று இருக்கின்றது. அங்கு பிரதோஷ விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் மூலவர் கரபுரநாதர், நந்திகேஸ்வரர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, தீபாராதனை வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பெரும்பாலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்தகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதம் கொடுக்கப்பட்டது.