கோவில் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதில் “பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹிம் யார்கான் மாவட்டத்தில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அது சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளிவந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்களை பாதுகாப்பதில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான சம்பவங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் அங்குள்ள பாகிஸ்தான் அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் சிறுபான்மையினர் மற்றும் அவரது வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலிருந்து அவர்களை பாதுகாப்பதில் வீழ்ச்சியடைந்து உள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.