கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு அந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர்.
இதனைப்பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.