கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.