கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .
மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுக்காவில் திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழி கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில், பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் .
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் போலீசார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .