கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாடப்பள்ளி ஊராட்சியில் அங்காநாதீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இரவு வழக்கம் போல பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அயடுத்து கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்குளையும் திருடி சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் கோவில் கதவை தொட்டால் ஒலி எழுப்பும் அலாரத்தின் வயரை துண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து காலை நேரத்தில் கோவிலை திறக்க வந்த போது திருடு நடந்திருப்பது கோவில் பூசாரிக்கு தெரியவந்துள்ளது. இது பற்றி கோவில் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடவியல் சோதனை செய்துள்ளனர்.