கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல பாண்டியாபுரம் கிராமத்தில் அரியநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் மணியாட்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது ராஜகோபால் நகர் பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் மற்றும் கோவில்பட்டி மந்தித்தோப்பில் வசிக்கும் கனகராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அருணாச்சலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.