Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடி மாத முக்கிய தினங்களில்…. நடைபெற்ற சிறப்பு பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆடி மாதம் செவ்வாய் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களை திறக்க அரசு தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.  இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் சிறப்பு வாய்ந்த பேராட்சி செல்வி அம்மன் கோவில் ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி கிழமை அன்று திறக்கப்பட்டு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி அலங்கார செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் கொக்கிரகுளம் முத்தாரம்மன், டவுன் பிட்டாபுரத்தி அம்மன், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் போன்ற கோவில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது.

Categories

Tech |