லட்சுமி நரசிம்மர் கோவிலில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை முன்னிட்டு பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோவில் வளாகம், உள்பிரகாரம், பக்தர்கள் ஓய்வு மண்டபம் என அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்று இருக்கிறது.
இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரத்தில் இருக்கும் இரண்டு சிவன் கோயில்கள் மற்றும் ரயில் நிலையத்திலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து முக்கிய வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.