மர்ம நபர்கள் கோவிலில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலின் முன்பக்க கதவு மற்றும் உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் உண்டியலில் இருந்து பத்தாயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களின் விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.