Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இது வழக்கமாக இருக்கு…. அலைமோதிய கூட்டம்…. மகிழ்ச்சியில் சென்ற பக்தர்கள்….!!

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கே வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பல பகுதியில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

எனவே இந்த வாரமும் விடுமுறை நாள் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலையில் இருந்து உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர்.

Categories

Tech |