கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபட மூன்று நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை சுப்ரமணியசுவாமி கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், டவுன் சாந்தநாத சுவாமி கோவில், இளஞ்சாவூர் வீரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
மேலும் ஆகமவிதிப்படி கோவில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்துகொண்டு பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.