நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அமர்ந்து இலையில் உணவு பரிமாறப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அங்குள்ள அன்னதான கூடங்களில் ஏழை எளியவர்களுக்கு மதிய நேரத்தில் இலையில் உணவு பரிமாறுவதை நிறுத்திவிட்டு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெரும்பாலும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கோவில் அன்னதானம் கூடங்களில் வைத்து பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவிலில் பக்தர்களை சாப்பாடு மேஜை முன்பு அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று அப்பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது.