Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலில் நடைபெற்ற திருட்டு…. நிர்வாகி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோவிலில் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி பகுதியில் மாடசாமி கோவில் அமைந்துள்ளது. அங்கு கோவில் நிர்வாகியான மணிகண்டன் என்பவர் கோவிலை பூட்டி விட்டு வழக்கம் போல் சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் காலையில் மணிகண்டன் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மணிகண்டன் கோவில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த தங்கப்பொட்டு, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இது குறித்து மணிகண்டன் ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியில் வசிக்கும் சவுந்தரபாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்ததோடு அவரிடம் இருந்த தங்கபொட்டு மற்றும் வெள்ளிபொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |