Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாமியின் நகையை திருடிய மர்மநபர்கள்…. கோவில் நிர்வாகிகள் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்பாளையம் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் பூஜை முடிந்து நிர்வாகிகள் வழக்கம்போல பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவில் கருவறை பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் கோவில் கருவறை பூட்டை உடைத்து அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த சுமார் 2½ பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி பொருட்கள், உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

மேலும் கோவில் பின்புறம் உள்ள அறையின் பூட்டை உடைத்து, அங்கு பீரோவில் இருந்த பட்டுப் புடவைகளையும் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் பாகாயம் காவலதுறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுவதாவது, கோவிலின் சுவரை மர்ம நபர்கள் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

Categories

Tech |