வருடந்தோறும் நடைபெறும் பகல்பத்து உற்சவத்தை பக்தர்கள் கண்டு களித்து சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் வருடம்தோறும் பகல்பத்து உற்சவம் பத்து நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பகல்பத்து உற்சவம் தற்போது தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தேவநாதசாமி பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றுள்ளது. அதன்பின் தேசிகர் சாமி மற்றும் பெருமாள் புறப்பட்டு பகல்பத்து மண்டபத்திற்கு கொண்டு செல்லபட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சாமியை தரிசனம் செய்து சென்றனர். இதனை அடுத்து வருகின்ற 11-ஆம் தேதி ஸ்ரீ ஆண்டாள் நீராடல் மூன்று நாள் உற்சவம் மற்றும் வருகின்ற 13-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து 13-ஆம் தேதி ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவமும் மற்றும் ராப்பத்து உற்சவம் தொடங்க இருக்கின்றது. மேலும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.