Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக…. பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு….!!

கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் நீராட அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மற்றும் புனித நீராட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன், கோவில் சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சை மலை முருகன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில் உள்ளிட்ட 23 கோவில்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவில்களில் உள்ள ஆறு, அணை பகுதிகளில் குளிக்கவும் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |