கோவில் பூசாரியை தாக்கி வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சின்னமுட்டம் பகுதியில் ஒரு கோவில் இருக்கின்றது. அந்த கோவிலில் கோழிப்போர் விளையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இவர் தினசரி காலையில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கின்றது .அதன்படி அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்கு சென்று விட்டு பின் பூஜை பொருட்கள் எடுத்து வருவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பூஜை பொருட்களை எடுத்து விட்டு மீண்டும் அவர் கோவிலுக்கு திரும்பியபோது 2 வாலிபர்கள் அங்கு வந்துள்ளனர்.
அப்போது அந்த வாலிபர்கள் மகாலிங்கத்தை வழிமறித்து தலையில் துண்டைப் போட்டு தாக்கியுள்ளனர். அதன்பின் மகாலிங்கம் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து வாலிபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.