நாளை கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுக்கான தேர்தலில் திமுக 8, அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 , சுயேச்சைகள் 4 இடங்களில் வென்றன. இந்நிலையில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட்து.
அந்த உத்தரவில் ஒத்திவைக்கப்பட்ட கோவில்பட்டி ஒன்றிய ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவிக்கு மார்ச் 4இல் தேர்தல் நடத்தலாம். தேர்தலில் மனுதாரர் பங்கேற்கலாம். ஆனால் தேர்தல் முடிவு நீதிமன்ற தீர்ப்புகுட்டப்பட்டது என்று உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.