திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது .
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு கோவிலில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.இதனையடுத்து படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால் மருத்துவமனையில் வனதாட்சிக்கு அம்மாளுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்கமால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.