கோவில் கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வளாகத்தில் மதுரைவீரன் மற்றும் சப்தகன்னியர் தனி சன்னதியில் இருக்கின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது கோபுரத்தில் இருந்த பழமை வாய்ந்த கலசங்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதாவது செல்லியம்மன் கோவில் மற்றும் அத்துடன் இணைந்து சிறு சன்னதியில் இருந்து மொத்தம் 4 கலசங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.