கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள கந்துக்கால்பட்டி வன்னியர் தெருவில் மாரியம்மன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றார். இந்நிலையில் மறுநாள் காலையில் பூசாரி கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கத்தாலி மற்றும் உண்டியலுடன் 50 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இவ்வாறு கோவிலில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.