Categories
உலக செய்திகள்

கோவிட்-19: மலேசியாவில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கோவிட்-19 காரணமாக மலேசியாவில் பலி எண்ணிக்கை 11ஆக   உயர்ந்துள்ளது. 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 192 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.

மலேசியாவில் இன்று காலை கோலாலம்பூரின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (Hospital Canselor Tuanku Muhriz HCTM) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த 70 வயது முதியவர் இறந்துள்ளார்.

இந்நிலையில்  மலேசியாவில் இதுவரை  கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். இதுவரை  மொத்தம் 1,306 பேர்  பாதிக்கபட்டுள்ளனர். மொத்தம் 22 நோயாளிகள் தற்போது ஐ.சி.யுவில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |