சென்னை கோயம்பேடு சந்தையில் கடை ஒதுக்கீடு செய்வதில் ரவுடிகளின் தலையீடு உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தையில் கடந்த 24 வருடங்களாக திரு பிரதீப் குமார் குடும்பத்தினர் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாற்று இடத்திற்கு சென்று விட்டு தற்போது மீண்டும் கோயம்பேடு கடைக்கு வந்த போது ரவுடிகள் சிலர் கடையை நடத்த விடாமல் கடையின் பெயர், உரிமையாளர் பெயர் ஆகியவற்றை பெயிண்ட் வைத்து அளித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்க பட்ட பிரதீப்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.