பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு ரசிகர்கள் ஏராளம் . தமிழில் மட்டுமல்லாது மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார் . தற்போது இவர் கைவசம் தமிழில் அண்ணாத்த ,சாணிக் காயிதம், தெலுங்கில் ரங் டே மற்றும் மலையாளத்தில் மரைக்காயர் ஆகிய படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலமேலுமங்கபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார் .
😊🙏🏻 #TempleVisit #AlamelumangapuramTemple #PrePongalVisit pic.twitter.com/FyodF8bgO3
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 10, 2021
அதில் கீர்த்தி மஞ்சள் சுடிதாரில் வெள்ளை துப்பட்டா அணிந்து மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் மெலிந்து காணப்படும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பழைய கொழுக் மொழுக் கீர்த்தியை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்துள்ளனர் .